கார்த்திகை 27, 2010 சனிக்கிழமை கனடா ரொறன்ரோவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகப்பெரிய எழுச்சியுடன் நான்கு நிகழ்வுகளாக நடைபெற்றுள்ளன. முதலாவது நிகழ்வாக காலை 6.55 மணிக்கும், இரண்டாம் நிகழ்வாக மதியம் 12 மணிக்கும், மூன்றாம் நிகழ்வாக மாலை 3 மணிக்கும், நான்காம் நிகழ்வாக மாலை 6.30 மணிக்கும் நடைப்பெற்ற நான்கு நிகழ்வுகளிலும் வரலாறு காணாது பல்லாயிரத்தில் தமிழ் மக்கள் கலந்துகொண்டு மலர் வணக்கம் செய்து உணர்வுபூர்வமாக கண்ணீர் மல்கிய காட்சி அனைவருக்கும் ஒரு உறுதியையும் புத்துணர்வையும் அளித்துள்ளது.
முதலாவது நிகழ்வானது தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆலய மணி ஒலிக்க துயிலும் இல்லப் பாடல் ஒலிக்க தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றும் அதே நேரம் இங்கும் ஏற்றப்பட்டது. துயிலும் இல்லப் பாடல் இறுவட்டில் இசைக்க தலைவர் ஈகைச் சுடர் ஏற்றும் காட்சி காணொளியில் காட்சிப்படுத்தப்பட துயிலும் இல்லத்தில் மாவீரர் குடும்பங்கள் கதறியழும் காட்சி வலம் வர மண்டப நிறைந்த மக்களோடு மிக எழுச்சியுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றன. எழுச்சி நடனங்கள், வானம்பாடிகளின் எழுச்சிப்பாடல்கள், சிறப்புரைகள், நாடகம் என அனைத்து நிகழ்ச்சிகளும் எங்களது கார்த்திகைப்பூக்களின் ஈகத்தை தாங்கி வந்தன. இந்த ஆண்டில் நடைப்பெற்ற மாவீரர் நிகழ்வு தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.
மாவீரர் நாள் நிகழ்வை உலகெங்கும் வாழும் பல்லாயிரக்கணக்காகன தமிழ் மக்கள் இணையத்தளத்தில் நேரடி ஒலிப்பரப்பு ஊடாகவும் பார்த்துள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்துள்ள இந்த தேசிய உணர்வெழுச்சி நாளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மீண்டும் தமது உறுதியை உலகிற்கு எடுத்துரைத்துள்ளனர்.
மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ் மண் குளிக்கும்
T.Thamilarasan
No Response to "ரொறன்ரோவில் மாபெரும் எழுச்சியுடன் தேசிய நினைவெழுச்சி நாள்"
Post a Comment