மாவீரர் நாள் நிகழ்வுகள்

உலகளாவிய ரீதியில் ஈழத்தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகிறது மாவீரர்நாள்
கனடா ரொறன்ரோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் தேசிய நினைவெழுச்சி நாள் 2010 நிகழ்வானது தயாகத்தில் நடைபெறும் அதே நேரமான காலை 6.55 மணிக்கு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, மாவீரர் துயிலும் இல்லப்பாடல்கள் காணொளியில் காட்சிப்படுத்தப்பட தமிழீழ தேசியத்தலைவர் மாவீரர்களுக்கான பிரதான ஈகைச்சுட<ரினை ஏற்றியதனைத் தொடர்ந்து, இங்குள்ள துயிலும் இல்லத்தில் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.
ரொறன்ரோவில் இன்று சற்று பனிப்பொழிவும் அதிகூடிய குளிரும் நிலவியபோதும் பெருந்தொகையான மக்கள் அதிகாலை நிகழ்வில் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மலர் வணக்கம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து எழுச்சி கலைநிகழ்வுகளும், நடைபெற்று முதல் நிகழ்வு நிறைவுப்பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த அரங்கத்தில் இன்னும் மூன்று நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.
அந்நிகழ்வினை நேரடியாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்

No Response to "கனடா ரொரன்ரோவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட மாவீரர்நாள் நிகழ்வு"

Post a Comment